வல்லமை மிக்க விடுதலை ஜெபம்.
என் ஆண்டவராகிய இயேசு கிருஸ்துவே, உம்மை வாழ்த்துகிறேன், போற்றுகிறேன், ஆராதிக்கிறேன், உமக்கு நன்றி கூறுகிறேன். நீரே உமது திருரத்தத்தால் விலை கொடுத்து என்னை வாங்கிவிட்டீர். ஆகவே நான் உமக்கு மட்டுமே சொந்தம். நீர் என்றென்றும் என் வலப்பக்கத்தில் இருப்பதால் நான் எதற்கும், எந்தத்தீமைக்கும், எந்த தீய சக்திகளுக்கும் அஞ்சவே மாட்டேன். நீரே என் ஆண்டவர், நீரே என் மீட்பர், நீரே என் அரசர்.
நான் உமக்கும் அயலானுக்கும் விரோதமாய் பாவம் செய்தேன். என் பாவங்களை எல்லாம் மன்னியும்.அவைகளை ஆழ்கடலில் எரிந்து போடும். நான் பாவத்தையும்,பாவத்திர்க்குக் காரணமான சாத்தானையும்,பாவத்தில் விழச்செய்யும் ஆள், இடம்,பொருள் யாவற்றையும் வெறுத்துத் தள்ளுகிறேன். என் உள்ளத்தை வெண்மையான பனிபோல் தூய்மையாக்கும். என்னைக் காப்பவர் நீரே. நான் தலை நிமிர்ந்து நடக்கச் செய்பவர் நீர் ஒருவரே.
அப்பா,தந்தாய், என்னை படைத்து, பாதுகாத்து, என் பாவங்களை எல்லாம் மன்னித்து, என்னை பராமரித்து வரும் அன்பு தெய்வமே! நீரே என் புகழிடம், நீரே அரண், நான் உம்மையே நம்பியுள்ளேன். உமது வார்த்தை எனக்கு கேடயமும், கவசமுமாய் உள்ளது. எந்தத் தீமையும் என்னை அணுகாது. எந்தத் தீமையும் என் வீட்டை நெருங்காது. ஏனெனில் நான் உமது செல்லப்பிள்ளை அல்லவா? உமது கண்ணின் மணிபோல என்னை காத்துவருகின்றீர்.
என் பகைவரிடமிருந்தும்,தீயோனிடமிருந்தும்,தீய சக்திகளிடமிருந்தும்,கொடிய நோய், வறுமை, பசி, பட்டினி, போர், விபத்து, ஆபத்து, இயற்க்கை சீற்றம், அனைத்து கேட்டிலிருந்தும் என்னை மீட்பவர் நீர் ஒருவரே. நீர் வல்லவர், நல்லவர், அனைத்திற்கும் மேலானவர்,விண்ணையும்,மண்ணையும்,அதில் உள்ள அனைத்தையும் படைத்து ஆள்பவர், ஆற்றல் மிக்கவர் நீர் ஒருவரே. முடிவில்லா பேரரசர் நீரே. உம்மை எதிர்த்து நிற்ப்பவர் யார்?
நான் செல்லும் இடமெல்லாம், என்னைப் பாதுகாக்கும்படி, என் காவல் தூதருக்குக் கட்டளை இட்டுள்ளீர்.விரியன் பாம்பின் மீது நடந்து செல்லவும், பறவை நாகத்தையே காலால் மிதித்துப் போடவும், எனக்கு வல்லமை தந்துள்ளீர்.உமக்கே புகழ்,உமக்கே நன்றி.
தாகமாய் இருப்பவன் என்னிடம் வரட்டும் - என்று கூறியே ஏசுவே, இதோ நான் தாகமாய் உம்மிடம் வருகிறேன். என்னை உமது தூய ஆவியால் நிரப்பும். என் உடல், ஆவி, ஆன்மா, யாவற்றையும் உமது ஆவியால் நிரப்பும். தூய ஆவியானவரின் கொடைகளால்,கனிகளால் நிரப்பும், அப்படியே நிரப்புவதற்காக நன்றி.
என் உடலையும்,ஆவியையும், என் ஆன்மாவையும், என் சிந்தனை,சொல், செயல், உணர்வுகள், என் வாழ்வையும், ( என் குடும்பம், என் வீடு, நிலபுலம்,உடைமைகள்,உயிருள்ள , உயிரற்ற பொருட்களையும்) சீர்குலைக்கும், எல்லா தீய சக்த்திகளையும், வஞ்சிக்கும், ஏமாற்றும், அழித்தொழிக்கும் எல்லா ஏவல் பிசாசுகளையும், இயேசு கிறிஸ்துவின் இணையற்ற நாமத்தினால், அவருடைய விலை மதிக்கப்படாத திரு இரத்தத்தால், அவருடைய வாக்கு மாறாத வார்த்தையினால் கட்டி இயேசுவின் திருப்பாதத்திலே தள்ளுகிறேன்.
என்னையும், என் வீட்டாரையும், உற்றார், உறவினர், நண்பர்களையும்,இந்த வீடு, இந்த அறை, இந்த இடம், உயிருள்ள, உயிரற்ற உடமைகள் அனைத்தையும் இயேசு கிருஸ்த்துவின் விலைமதிப்பற்ற திரு இரத்தத்தின் கோட்டைக்குள்ளே வைத்து முத்திரை இடுகிறேன். நாங்கள் உம்மையே சார்ந்திருப்பதால் எல்லா தீமைகளிலிருந்தும் எங்களை விடுவிப்பீர். நாங்கள் உம்மை நோக்கி கூப்பிடுவதால், எம் ஜெபத்தைக் கேட்டு, துன்ப வேளையில் எமக்கு துணை செய்வீர். எம்மை தப்புவித்து பெருமைப்படுத்துவீர். உம்மை நம்பினோரை நீர் என்றும் கைவிட மாட்டீர். உமக்கே என்றென்றும் ஆராதனையும், துதி, கன, மகிமை உண்டாவதாக. ஆமென்.
with the permission நன்றி._அருட்தந்தை.ஜோனதான்.O.F.M. Cap
Spiritual Director.Fathima Church,
4th street Extn.Gandhipuram,Cbe.12.