திருவிவிலியம் சொல்லும் நீதிமொழிகள்
நீதி மொழிகள்.
தாவீதின் மகனும் இஸ்ரேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.
இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்ப்பயிர்ச்சியும் பெறுவார். ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்து கொள்வர்.
நீதி,நியாயம்,நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவார்.
அறிவற்றோர் கூரறிவு பஐவர். இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.
ஞானமுள்ளோர் இவற்றைக்கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர். விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவார்.
நீதிமொழ்களையும் உவமைகளையும் ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும் அவர்கள் உய்த்துனர்வர்.
இளைஞருக்கு நல்லுரை.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்.ஞானத்தையும் நற்ப்பயிர்ச்சியையும், மூடரே அவமதிப்பர்.
பிள்ளாய், உன் தந்தை தந்த நற்ப்பயிர்ச்சியைக் கடைப்பிடி, உன் தாய் கர்ப்பிப்பதைத் தள்ளிவிடாதே,
அவை உன் தலைக்கு அணிமுடி, உன் கழுத்துக்கு மணிமாலை.
பிள்ளாய், தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியுட்டி இழுப்பார்கள், நீ அவர்களுடன் போக இணங்காதே .
அவர்கள் உன்னைப்பார்த்து, "எங்களோடு வா, பதுங்கியிருந்து யாரையாவது கொள்வோம்,யாராவது ஒரு அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம். பாதாளத்தைபோல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம். படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம்.
எல்லா வகையான அரும் பொருட்களும் நமக்குக் கிடைக்கும், கொள்ளை அடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.
நீ எங்களோடு சேர்ந்துகொள்,எல்லாவற்றிலும் உனக்குச் சமபங்கு கிடைக்கும்" என்றெல்லாம் சொல்வார்கள்.
பிள்ளாய்,அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே, அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.
அவர்கள் கால்கள் தீங்கிழைக்க துடிக்கின்றன, ரத்தம் சிந்த விரைகின்றன.
பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.
அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்.
அவர்கள் ஒழிந்து காத்திருப்பது அவர்களேயே அழிக்கும் பரியாகிவிடும்.
தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே.அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரை குடித்துவிடும்.