ஒரு முறை ஒரு தம்பதியர் ஒரு வயதான கிறிஸ்துவ பாதிரியாரை பார்க்க அந்த சர்ச்சுக்கு வந்தார்கள்.என்ன விஷயம் என்று அவர் அந்த தம்பதியிடம் கேட்டார்.அதற்க்கு அந்த பெண் பாதர், இவர் எனது கணவர்.எங்களுக்கு திருமணம் ஆகி இருவது வருடம் ஆகிவிட்டது.இந்த ஆளோடு இத்தனை வருஷம் கஷ்ட்டப்பட்டு குடும்பம் நடத்திவிட்டேன்.இனி இந்த ஆளோடு ஒரு நிமிஷம்கூட குடும்பம் நடத்த முடியாது.எனெவே எங்க ரெண்டு பேரையும் பிரிச்சுவிட்டுடுங்க.டைவோர்சே முதல்ல கொடுங்க என்றார்.அதற்க்கு அந்த ஆள்,சாமீ,நான் சொல்றத மொதல்ல கேளுங்க.இவகூட நான் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் நரகம் தான்.இந்த நிமிஷமே எனக்கு இவள்ட்ட இருந்து எனக்கு விடுதலை கொடுங்க என்றார்.
அந்த பாதிரியார்,அப்படியா,ரெண்டு பேரும் மொதல்ல ,என் முன்னாள் மொழங்கால் போடுங்க,என்றார்.அவங்க ரெண்டு பேரும் அவர் முன்னாள் மொழங்கால் போட்டாங்க.அந்த பாதிரியார்,தீர்த்த சொம்ப,அதன் கீழ்ப்பாகம்(குண்டாக இருக்கும் பகுதி) மேலே இருக்கும்மாறு அதன் மேல் பகுதிய பிடுச்சு அவரது வலது கையாள தூக்கிப் பிடுச்சுகிட்டார்.தன இடது கையில் அவரது கட்டளை ஜெப புத்தகத்தைப் பிடிச்சுகிட்டு நின்றார்.ரெண்டு பேரும் கண்ணை மூடி ஜெபம் பண்ணுங்க என்று ,கட்டளை ஜெப புத்தகத்திலிருந்து ஒரு சிறிய ஜெபம் செய்துவிட்டு,அந்த தீர்த்த சொம்பினால் அந்த ஆளின் நடு மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார்.ஐயோ என்று அந்த ஆள் கத்தினான்,அதற்க்கு பாதிரியார்,ஏய்,சத்தம் வெளியே வரக்கூடாது,மூச்,என்று,அவர் மீண்டும் ஒரு சிறிய செபத்தை சொல்லிவிட்டு, அந்த தீர்த்த சொம்பினால்,அந்த பொம்பளையின் நடு மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார்.ஐயோ,சாமீ,உசுரு போகுதே என்று அந்த பொண்ணு கதறினாள்.இப்படியாக,அந்த பாதிரியார்,விடாமல்,ஒருவர் மாற்றி ஒருவரின் மண்டையில் தீர்த்தசொம்பை வைத்து போடு போடு என்று விலாசிக்கொண்டு இருந்த்தார்.
அப்போது அந்த இருவரும்,சாமீ,இந்த பூச எப்ப முடியும் என்றனர்.அதற்க்கு அந்த பாதிரியார்,ஒங்க ரெண்டுபேர்ல ஒருத்தர் மண்டையப் போட்டாத்தான்,இந்த பூச முடியும்,அதனால,இப்ப ரெண்டு பேரும் இப்படி பூசைக்கு இடையில் பேசி தொந்தரவு கொடுக்காம,கண்ணா மூடிட்டு இருங்க.என்று மறுபடியும் ஜெபம் பண்ண ஆரம்பிச்சார்.
அப்பா அந்த ரெண்டு பேரும்,இவருக்கிட்ட அடிவாங்கி சாகுறதுக்கு, பேசாம நாம ரெண்டு பேரும் சமாதானமா ஒண்ணா சேர்ந்து வாழலாம் என்று அங்கிருந்து ஓடிப்போயட்டாங்க .
நீதி என்னவென்றால்.
விட்டுக்கொடுத்து ,மன்னிச்சு,புருஞ்சிக்கிட்டு,சமாதானமா வாழ்த்தால்,இந்த பூசையே தேவை இருக்காது.
சண்டையில் விட்டுக்கொடுக்கின்றவர் மற்றவரை தக்கவைத்துகொள்வார்.
சண்டையில் ஜெயிப்பவர் மற்றவைரை இழந்து விடுவார்.
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
சண்டையில் முதலில் வாயை மூடுபவர்கள்,நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்.